திருச்சி மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் தற்போது காவேரி பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கடந்த இரண்டு மாத காலமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பழைய காவிரி பாலத்தை இருசக்கர வாகனங்களுக்கு திறப்பதாக மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வரும் நிலையில் அந்த பாலத்தில் ஆட்டோவுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் மாவட்டத் தலைவர் கோபி தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மணலி தாஸ் பொருளாளர் செல்வராஜ் தலைவர் ஜீவா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.