Skip to content

600 பாஜகவினர் திமுகவில் ஐக்கியம்…தட்டி தூக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவில் தென்னரசு உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று ஈரோட்டில் ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிஜேபியின் ஈரோடு மண்டல தலைவர் ஸ்ரீநிவாசன் தலைமையில் 600 பேர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் இந்த இணைப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!