விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் அறிவிப்பு கடந்த பிப்ரவரி 3-ஆம் வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி மிரட்டலான டைட்டில் டீசரும் வெளியிடப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 60 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலம் பகல்ஹாம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு -5° குளிரில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு விஜய், திரிஷா, லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் என 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த படப்பிடிப்பில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விஜய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு நடத்துவது சவால் நிறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.