4 டெஸ்ட் மற்றும் 3 ஒன்டே மேட்ச்களில் ஆட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை நாக்பூரில் தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. பிற்பகல் தேநீர் இடைவேளைக்கு பிறகு ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதாவது 63.5 ஓவர்களில் 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லபுசக்னே அதிகபட்சமாக 49 ரன்கள் சேர்த்தார். இந்திய வீரர்களின் சுழல்பந்து வீச்சில் சிக்கி விக்கெட்டுகள் மளமளவென சாய்ந்தது.
முழங்காலில் காயம் எனக்கூறி மனைவியின் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு விளையாட்டுக்கு திரும்பிய ஜடேஜா முதல் டெஸ்டிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றுவது இது 15வது முறைஅஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அவர் 452 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவில் டெஸ்ட்களில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் 2 வது இடத்திலும் உலக அளவில் 9வது இடத்திலும் உள்ளார்.
சிராஜ், ஷமி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன் பிறகு இந்திய அணி பேட்டிங் தொடங்கியது.