திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்நாடு ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது. மூலக்காடு கிராமம் இங்கு 70 வருடங்களுக்கு மேல் 150-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளான தெருவிளக்கு. சாலை வசதி. குடிநீர் வசதி மற்றும் இறந்தவர்கள் சடலத்தை எரியூட்டுவதற்கு தேவையான இடுகாடு போன்ற வசதிகள் கேட்டு அரசிடம் பலமுறை
மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனுக்கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் ஒன்றிய தலைவர் கணபதி தலைமையில் நடைபெற்றது. மாநில பொருளாளர் பொன்னுசாமி, ஆனந்த் ஜெயசீலன் , முத்துசாமி, சங்கிலி துரை, உள் பட 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு துணை வட்டாச்சியரிடம் மனு அளித்தனர்.