கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சித்தலவாய் ஊராட்சி 6வது வார்டு உறுப்பினருக்காக 2019 ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கம் ( டிஸ்மிஸ் )- மாவட்ட ஆட்சியர் அதிரடி.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சித்தலவாய் ஊராட்சியில் கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 6வது வார்டு உறுப்பினர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதில் பெண்கள் போட்டியிடாமல் இரண்டு ஆண்கள் போட்டியிட்டனர்.
இதில் கிருஷ்ணமூர்த்தி என்கின்ற ஆண் வேட்பாளர் வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆண் வெற்றி பெற்றது எப்படி என்று கேள்வி எழுப்பியது
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பணியில் கவனக் குறைவாகவும், தன்னிச்சையாகவும், செயல்பட்ட கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வெங்கடாசலம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கரூர் தென் மண்டல ஆய்வாளர் சிவக்குமார் ஆகிய இரண்டு பேரையும் அரசு பணியில் இருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.