Skip to content
Home » திருச்சியில் மதிப்புக் கல்வித் துறை சார்பில் சர்வதேச மாநாடு……

திருச்சியில் மதிப்புக் கல்வித் துறை சார்பில் சர்வதேச மாநாடு……

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஹோலி கிராஸ் கல்லூரியின் மதிப்புக் கல்வித் துறை சார்பில் “இன்றைய இளைஞர்களின் நிலையான வளர்ச்சிக்கான மாற்றும் சக்தி மதிப்புக் கல்வி” என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு இன்று நடைபெற்றது.

மாநாட்டில் அறிவியல் துறைத் தலைவர் டாக்டர். டுரின் மார்டினா வரவேற்புரை வழங்கிட. கல்லுாரி துணை முதல்வர் மற்றும் செயலர் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் அருட்.சகோதிரி கிறிஸ்டினா பிரிட்ஜெட் தலைமை தாங்கினார். ஹோலி கிராஸ் கல்லூரியின் செயலாளர் முனைவர் அருட்.சகோதிரி ஆனி சேவியர் மற்றும், துணை முதல்வர், இசபெல்லா ராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு

அழைப்பாளராக ஆஸ்திரியா இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகம் பைபிள் படிப்புகள் துறைத் தலைவர் டாக்டர். போரிஸ் ரெப்சின்ஸ்கி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில் பங்கேற்பாளர்களுக்கு சுவரொட்டி வழங்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. மாநாட்டின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய கிட்டத்தட்ட 25 சுவரொட்டிகள் காட்டப்பட்டன.வெவ்வேறு இடங்களில் இருந்து அழைக்கப்பட்ட பாட நிபுணர்களால் மூன்று விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன. இறுதியாக சுவரொட்டி வழங்கும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் மாநாட்டில் பங்கு பெற்றவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இறுதியாக திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி (தன்னாட்சி) புனர்வாழ்வு அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறையின் இணைப் பேராசிரியை டாக்டர். ஸ்வர்ண்குமாரி அவர்கள் நன்றியுரை வழங்கலுடன் விழா நிறைவு பெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழகம், பிஷப் ஹீபர் கல்லூரி, செயின்ட் ஜோசப் கல்லூரி, காவேரி கல்லூரி, கலை காவேரி போன்ற பல்வேறு 11 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டின் மூலம் மொத்தம் 300 பங்கேற்பாளர்கள் பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *