அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாஷ் திருமணவிழா கடந்த மாதம் 3ம் தேதி கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் மற்றும் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர், தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். மேலும் பா.ஜ.கவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், குஷ்பூ மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் எஸ்.பி வேலுமணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டனர். இதில் தவிர்க்கமுடியாத காரணங்களால் கலந்து கொள்ளாத நடிகர் ரஜினிகாந்த், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மகன் விஜய் விகாஷ்- தீக்ஷணா புதுமண தம்பதியினரை நேரில் சென்று வாழ்த்தினார்.
இதுகுறித்து எஸ்பி வேலுமணி தனது எக்ஸ் தளத்தில், “எங்களது மகன் V.விஜய் விகாஸ் – C.T.தீக்ஷணா இணையரின் திருமணம் அண்மையில் நடைபெற்றதையடுத்து, சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் எங்களின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
