திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. ப. குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைந்திட நமது மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளும் அல்லும் பகலும் அயராது உழைத்து பாடுபடுவோம் என்று உறுதி ஏற்கிறோம்.
பொய் வாக்குறுதி கொடுத்து, கடன் சுமையை ஏற்றிய திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
திருச்சி உறையூர் பகுதியில் சமீபத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததன் காரணமாக, ஒரு குழந்தை உட்பட நான்கு பேரின் மரணத்திற்கு காரணமான மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களையும், அதேபோல் சமீபத்தில் மணப்பாறையில் சுகாதாரமற்ற முறையில் சமைத்த சத்துணவை சாப்பிட்ட பத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கு காரணமான பள்ளி கல்வித்துறையையும் அதன் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும் இக்கூட்டத்தில் வாயிலாக கண்டிக்கிறோம்.
பஹல்காம் தாக்குதலில் பலியான 27 பேரின் குடும்பத்துக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் பிறந்த நாளான 12.05.2025 அன்று நமது திருச்சியில் புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் வட்ட, கிளை கழகங்கள் வாரியாகவும், சார்பு அணிகளின் சார்பிலும் சிறப்பான முறையில் கொண்டாடுவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.