பஹல்காமில் 26பேரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து இரு நாடுகளிலும் போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்த நிலையில் போர் மூண்டால் பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா போன்ற நாடுகள் உதவலாம் என்றும், கராச்சியில் உள்ள விமானப்படை தளத்துக்கு நேற்று முன்தினம் துருக்கி விமானப்படைக்கு சொந்தமான ‘சி -130 ஹெர்குலிஸ்’ போர் விமானம் சென்றது அதில், ஏராளமான போர்கருவிகள் எடுத்துச் செல்லப்ப்பட்டதாகவும் கூறப்பட்டது.
விமானங்கள் வருகையை இரு நாடுகளும் உறுதி செய்தபோதிலும், அவற்றில் எடுத்துச் செல்லப்பட்ட ராணுவ தளவாடங்கள் பற்றிய விவரம் வெளியாகவில்லை.
இந்த நிலையில், போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது. சரக்கு விமானம் மட்டுமே பாகிஸ்தானுக்கு சென்றதாகவும் துருக்கி விளக்கமளித்துள்ளது.
சரக்கு விமானம் விமானப்படை தளத்துக்கு சென்று சரக்குளை இறக்கியது என்றால் என்ன சரக்குகள் அதில் கொண்டு வரப்பட்டது என்பதை துருக்கி உறுதி செய்யவில்லை. எனவே துருக்கி போர் கருவிகள் தான் பாகிஸ்தானுக்கு சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.
