திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்த வேலு இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மகாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மார்பில் கட்டி இருந்ததன் காரணமாக பல வருடங்களாக அவதி உற்று வந்ததாக தெரிகிறது.
இதனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும் வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு எல்லாரும் தூங்கச் சென்ற பின்னர் வீட்டின் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் காலையில் நீண்ட நேரம் அறையின் கதவு திறக்கப்படுதல் குடும்பத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசருக்கு தகவல் தெரிவிக்கையில் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் 6வருடங்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.