குருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கபட்டது தருமை ஆதீனம். இந்த ஆதினத்திற்கு சொந்தமான இடங்களை தற்போதைய 27-வது குரு மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்ந்து தனியாருக்கு விற்று வருவதை தடுக்க கோரியும். குளிச்சார் பகுதியில் ஆதீன நிலத்தில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் நிலத்தை தனியார் வீட்டு மனை போட்டு விற்பதை தடுக்கவேண்டும்,
ஆதீனத்தின் மீது பெண்களுடன் ஆபாச பாலியல் குற்றச் சாட்டு வழக்கு விசாரணையை சிபிசிஐடி அல்லது சிபிஐ மூலம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும், , பாலியல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க ஆதீன சொத்துக்களை விற்பனை செய்துவருகிறது- ஆதீன தர்மத்திற்கு எதிராக செயல்படும் 27வது சன்னிதானத்தை உடனடியாக வெளியேற்றவேண்டும்
இதுவரை விற்பனை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஆதீன சொத்துக்களை மீட்கவேண்டும் தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 100 -க்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக கூட்டமாக ஏவந்த பொதுமக்களை மாவட்ட ஆட்சியரை சந்திக்க எதிர்ப்பு தெரிவித்த காவல் துறைக்கும் பொதுமக்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
