த.வெ.க.வின் அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கம் மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிரமாக அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் என கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்து கட்டமைப்புகளை பலப்படுத்தியுள்ள விஜய், அடுத்தகட்டமாக பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கோவையில் தமிழக வெற்றி கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த நிலையில், த.வெ.க.வின் அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கம் மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் மே முதல் வாரத்தில் மதுரையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் கொடைக்கானல் செல்லும் சாலையில் இடம் பார்க்கும் பணி துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
