Skip to content

பெண்களின் பாதுகாப்பிற்கு-அதிரடியாக களமிறங்கும் ”ரோபோட்டிக் காப்” வசதி

  • by Authour

சென்னையில் களமிறங்கும் “ரோபோட்டிக் காப்” -சென்னை மாநகர காவல்துறை அறிவிப்ப வெளியிட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதி.

மாநகரின் 200 முக்கிய இடங்களில் ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப் என்ற புதிய பாதுகாப்பு சாதனம் விரைவில் பொருத்தம்.

24 மணிநேரமும் இயங்கக் கூடிய இந்த பாதுகாப்பு சாதனம் 360 டிகிரியில் சாலையின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராயும்.

சாதனத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம் காவல் கட்டுபாட்டு அறையுடன் நேரடி தொடர்பு.

உடனடியாக காவல் துறைக்கு அழைப்பும், அருகில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை எச்சரிக்கைப்படுத்தவும் முடியும்.

ஆபத்தில் உள்ளவரை காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள வசதி.

வீடியோ கால் மூலம் ஆபத்தில் உள்ளவரின் நிலை அறிந்து கொள்ளவும் முடியும் எனத் தகவல். மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் சாதனத்தை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!