Skip to content

தஞ்சை அருகே தாயை அடித்து கொன்ற மகன் கைது..

  • by Authour
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாயை அடித்து கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர். கும்பகோணம் அருகே ஆடுதுறை எஸ்‌எம்.எஸ். கார்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி பிருந்தா (40). இவர்களது மகன்கள் அருண்குமார் (18), அன்புக்கரசன்(15). மகள் ஐஸ்வர்யா(10) ஸ்டாலினுக்கும், அவரது மனைவி பிருந்தாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சனையால் மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குத்தாலம் அருகே அஞ்சாறு வார்த்தலையில் வசிக்கும் தனது தாய் வீட்டுத்கு மகள் ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு பிருந்தா சென்று விட்டார். மகன்கள் இருவரும் தந்தையுடன் இருந்துள்ளனர். இந்நிலையில் ஸ்டாலினுக்கு அவரது உறவினர்கள் திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்ற பெண்ணை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். ஸ்டாலின் இறந்த நிலையில் தமது மகன்களுடன் வாழ பிருந்தா முடிவு செய்துள்ளார். இந்நிலையில் ஸ்டாலின் இரண்டாவதாக திருமணம் செய்த உமா மகேஸ்வரி தமது பிறந்த வீடான திருநாகேஸ்வரம் சென்று விட்டதாக கூறப்படுகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பிருந்தா தனது மகள் ஐஸ்வர்யாவுடன், ஆடுதுறையில் உள்ள எஸ்எம்எஸ் நகரில் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு மூத்த மகன் அருண்குமார் தங்களை சிறிய வயதில் ஏன் விட்டுவிட்டு சென்றீர்கள். தற்போது ஏன் வந்துள்ளீர்கள் என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் காலை முதல் மூத்த மகன் அருண்குமார் பிருந்தாவிடம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அருண்குமார் வீட்டிலிருந்த கடப்பாரையை எடுத்து பிருந்தா தலையில் அடித்துள்ளார். இதில் மயங்கி கீழே விழுந்த பிருந்தா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் திருவிடைமருதூர் போலீஸ் டிஎஸ்பி ராஜு, இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பிருந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீஸார் மூத்த மகன் அருண்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
error: Content is protected !!