திருச்சி மதிமுக எம்.பி துரைவைகோ புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி யில் தொகுதி மக்களின்
குறைகேட்கும் முகாமினை மக்களுடன்நம்ம எம்.பி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. புதுக்கோட்டையில்
நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள
நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்
புதுக்கோட்டை மாநகராட்சி யின் மக்கள் நலன்கருதி மினிஹிட்டாச்சியும்,
குடிதண்ணீர் வழங்குவதற்கான வாகனம் ஆகிய வை
நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வழங்கிட வேண்டும் என
மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் ,
துணைமேயர் எம்.லியாகத்தலி ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ விடம்
கடிதம் அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட எம்.பி. இது குறித்து ஆவன செய்வதாக உறுதி அளித்தார். அப்போது ம.திமுக மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி இருந்தார்.
