Skip to content

திருச்சியில் சிவாஜி சிலை, 9ம் தேதி முதல்வர் திறக்கிறார்

திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நாளை (29-ந் தேதி ) காலை 11 மணிக்கு
மேயர் அன்பழகன் தலைமையில் நடக்கிறது.கூட்டத்தில் துணை மேயர் திவ்யா,மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,ஜெயா நிர்மலா,துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன்,ஆண்டாள் ராம்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் உள்ள சிவாஜி சிலையை அகற்றி திருச்சி சோனா மீனா தியேட்டர் எதிரில் உள்ள ரவுண்டானாவில் அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. புதிய இடத்தில் அந்த சிலையை மே 9-ந் தேதி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

2011ம் ஆண்டு பாலக்கரையில் சிவாஜி சிலை அமைக்கப்பட்டு  திறப்பு விழா காணாமல் மூடியே கிடந்தது. இப்போது அந்த சிலைக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. இதனால் சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

error: Content is protected !!