பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளான 130 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயிலுக்கு இரண்டு டிரைவர்கள் நியமிக்க வேண்டும், சாப்பிடுவதற்கும், கழிவறை செல்வதற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும், வாராந்திர கட்டாய ஓய்வு வேண்டும், வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர். எம்.யூ அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனம் சார்பில் திருச்சி ரயில் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டச் செயலாளர் (எல்.ஆர்.எஸ்) சுதாகர் தலைமையில் இன்று நடந்தது. எஸ்.ஆர்.எம்.யூ. மாநில துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் கண்டன உரையாற்றினார் .இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- by Authour
