அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஒரு வருடத்திற்கு பின்னர் ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆனார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் எனவே அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அல்லது ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.
இதைத்தொடர்ந்து 28ம் தேதி(இன்று) மதியம் 2 மணிக்குள் அமைச்சர் பதவியா அல்லது ஜாமீனா என்பதை செந்தில் பாலாஜியே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ED தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜியின் ஜாமீன் நிபந்தனைகளை கடுமையாக்க வேண்டும். வழக்கு முடியும் வரை அவர் எந்த பதவியும் வகிக்க கூடாது என்று உத்தரவிடவேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் இதனை ஆட்சேபித்தார். வழக்கு விசாரணை முடிய 15 வருடம் ஆகலாம். அதுவரை அவர் எந்த பதவியும் வகிக்க கூடாதா என்று கேட்டார்.
இந்த வாதத்தை கேட்ட உக்நீதிமன்றம், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்கவில்லை. விசாரணை முடியும்வரை செந்தில் பாலாஜி எந்த பதவியும் வகிக்க கூடாது என்று உத்தரவிட முடியாது என கூறி வழக்கை முடித்து வைத்தது.
.