Skip to content

குரூப் 1 தேர்வு: அரசு பள்ளி ஊழியர் மகள் டிஎஸ்பியானார்

  • by Authour
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரை சேர்ந்த  ஐஸ்வர்யா,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையகம் நடத்திய  குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை துணை கண்காணிப்பாளராக( டி.எஸ்.பி) பணி நியமனம் பெற்றுள்ளார். இவரது தந்தை கண்ணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராகவும், தாயார் தேவகோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது சொந்த ஊர் திருவாடானை அருகே உள்ள ஆதியூர்.  கல்வித் துறையில் இருந்து  காவல் துறையில் உயர் பதவிக்கு    தேர்வாகியுள்ள   ஐஸ்வர்யாவை  ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் ,கிராம மக்கள்  வாழ்த்தி பாராட்டினர்.
error: Content is protected !!