Skip to content

திருச்சி-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது…

  • by Authour
போதை மாத்திரைகள் விற்பனை.. 7 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காமராஜ் நகர் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் அரியமங்கலத்தை சேர்ந்தவர்களான சண்முக பிரியன் (20), ரியாஸ் அஹமத் (24), விஷால் கிருஷ்ணா (20), இப்ராஹிம் மூசா (21) மற்றும் ரவுடிகள் தீபக் (வயது 20), உதுமன் அலி (22) ஆகியோர் போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் 6 பேரையும் கைது செய்து 105 போதை மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் எட தெருவில் பாய்கடை சந்து பொது சுகாதார வளாகம் அருகே போதை மாத்திரைகள் விற்ற அரியமங்கலத்தை சேர்ந்த அசார் முகமது (27) என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். குட்கா விற்றவர் கைது.. திருச்சி காஜாமலை மெயின் ரோட்டில் உள்ள டீ கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் வந்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அங்கு புகையிலை பொருட்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கபட்டது. இதனையடுத்து அதிகாரிகள் கே. கே. நகர் போலிசில் புகார் அளித்தனர். போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடையில் இருந்த காஜா மலையை சேர்ந்த கௌரி சங்கர் (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   பாஜக பிரமுகரின் பெயர் படத்தை தவறாக பயன்படுத்தி இன்ஸ்டா பக்கத்தில் சர்ச்சை வீடியோ பதிவிட்ட திருச்சி வாலிபர் கைது திருச்சி மாநகர சைபர் கிரைம் தலைமை காவலராக இருப்பவர் ராஜசேகர்.இவர் அலுவலகத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார் அப்போது திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் வள்ளுவர் நகர் ஜின்னா தெருவை சேர்ந்த மன்சூர் அலி வயது 26 என்பவர் பழனிபாபா பெனாடிக் 07 என்ற ஐடியில் இருந்து ஒரு வீடியோ பதிவிட்டார். அந்த வீடியோவில், “தலித் ஹுசைன் ஷா ஜம்மு-காஷ்மீரில் பாஜக கட்சியின் ஐடி பிரிவின் பொறுப்பாளராக உள்ளார், மேலும் அவர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டார், மேலும் அவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பிற்காக பணியாற்றுகிறார்” என்று கூறினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், மாநகர சைபர் கிரைம் போலீசில் ஆள்மாறாட்டம் செய்து பாஜக பிரமுகரின் பெயர் மற்றும் புகைப்படத்தை தவறாக பதிவிட்டு இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையிலும் அரசாங்கத்தின் மீது வெறுப்பை உருவாக்கும் வகையிலும் அந்த வீடியோ பதிவு உள்ளது மேலும் மத அடிப்படையில் பகைமையை உருவாக்கவும் ,பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கமாகக் கொண்டது என புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் அவர் மீது வழக்கு பதிவு செய்து மன்சூர் அலியை உடனடியாக கைது செய்தார். 6 செல்போன்கள் பணம் திருட்டு   திருச்சி சுப்பிரமணியபுரம் ஔவையார் இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 51). இவர் திருச்சி அண்ணாமலை நகர் மலர் சாலை பகுதியில் நடைபெற்று வரும் கட்டிடப் பணியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு மர்ம நபர் ஒருவர் கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் 6 செல்போன்கள் மற்றும் ரூ.8 ஆயிரத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றார். இது குறித்து உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் கரூர் முதியவர் கைது கரூர் மணியக்கார பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 60).இவர் திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்வதற்காகஏர் ஏசியா விமானத்தை பிடிக்க திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.அப்போது அவரை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனையிட்டனர்.அப்போது அவரது பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை இட்டபோது,அதில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.உடனே இதுகுறித்து இமிகிரேஷன் அதிகாரி லோகநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏர்போர்ட் போலீசார் செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
error: Content is protected !!