மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே மேலையூர் கிராமத்தில் உள்ள உத்திராபதியார் கோவில் அமுதுபடையல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயிலில் போக்கஸ் லைட் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள தங்கதுரை மகன் பத்தாம் வகுப்பு படித்து வந்த தமிழ்துரை (15) வயது சிறுவன் நண்பர்களுடன் கோயிலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது போக்கஸ் லைட் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான் இந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. செம்பனார்கோவில் போலீசார் சிறுவன் தமிழ்துரை உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
