கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியைச் சேர்ந்த குமார் (50) இவருடைய மனைவி கவிதா ஆகிய தம்பதியினருக்கு காவியா(17) பெண் பிள்ளை உள்ளது.
காவியா அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இதனால் இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் கார்த்தி ஊரில் எதிர்ப்புகள் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது இதன் காரணமாக 17 வயதில் பெண்ணை திருமணம் செய்து வைத்ததாக கூறி பர்கூர் காவல் நிலையத்தில் புகார்
அளித்துள்ளனர். இதன் காரணமாக 17 வயது சிறுமி காவியா பூச்சி மருந்து குடித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.
இதனால் பர்கூர் போலீசார் குழந்தை திருமண வழக்கில் காவியாவின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் முன் ஜாமின் வாங்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற பெற்றோர்கள் இருவரும் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மொளகரன்பட்டி கீழ் குறும்பர் தெரு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் நேருக்கு நேர் நின்றது ரயில் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சிதறி கிடந்த உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணின் காதலை ஏற்று 17 வயதில் திருமணம் செய்து வைத்ததால் போலீசரால் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் கணவன் மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
