Skip to content

தங்கையிடம் தவறாக நடந்துகொண்ட நண்பனை அடித்து கொன்ற அண்ணன்….

ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்த நம்பு ராஜன்.இவரை  மார்ச் 31 இல் இருந்து இவரை காணவில்லை என நம்புராஜன் தங்கை ராணி ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெங்கடசுப்பிரமணி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொள்ளும் பொழுது வெங்கடசுப்பிரமணி கொலை செய்த சம்பவத்தை ஒப்புக் கொண்டுள்ளார். வெங்கடசுப்பிரமணி நம்பு ராஜன் இருவரும் 15 வயதில் இருந்தே நண்பர்கள் கடல் தொழிலுக்கு ஒண்ணாக செய்து வந்த நிலையில் இரவு நேரத்தில் வெங்கடசுப்பிரமணி வீட்டுக்கு அருகாமையில் உட்கார்ந்து நம்புராஜன் மற்றும் வெங்கடசுப்பிரமணி மதுப்பழக்கம் அருந்துவது வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெங்கடசுப்பிரமணி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வந்த நம்புராஜன் வீட்டில் மனவளர்ச்சிகுன்றிய வெங்கடசுப்பிரமணி தங்கையிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனை நேரில் கண்ட வெங்கடசுப்பிரமணி இரும்பு ராடால் நம்புராஜனை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன் பின் அவரது வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாதி கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தின் அடித்தளத்தில் இரண்டு அடிக்கு குழி தோண்டி நம்பு ராஜனை புதைத்து வைத்துள்ளதாக போலீசாரிடம் வெங்கடசுப்பிரமணி தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து நம்புராஜன் உடலை தோண்டி எடுத்தனர். அதன் பின் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சில எலும்பு பாகங்கள் பிரேத பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்பு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக வெங்கட சுப்பிரமணி குடும்பத்தினர் அனைவரும் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நண்பர்களுக்குள்ளே ஏற்பட்ட தகராறு ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!