Skip to content

கிரிக்கெட்: பாக். பிரிவில் இந்தியா இடம் பெறாது

பாகிஸ்தான் அரசும், அந்த நாட்டு தீவிரவாதிகளும் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான  நாசவேலைகள், வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக  பாகிஸ்தானுடன் இந்தியா எந்த  விளைாயட்டு போட்டிகளிலும் பங்கேற்பதில்லை.  குறிப்பாக இருதரப்பு கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளயைாடுவதில்லை.  பாகிஸ்தானுக்கு சென்றும் போட்டியில் பங்கேற்பதில்லை.

இந்த நிலையில் கடந்த 22 ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள்,  காஷ்மீர் மாநிலம்  பஹல்காமில் புகுந்து 26 பேரை சுட்டுக்கொன்றனர்.  இதனால் இருநாடுகளுக்கும் மேலும் பிரச்னை பெரிதாகி உள்ளது.

இந்த நிலையில் பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், “இனி வரும் நாட்களிலும் இருதரப்பு போட்டிகளில் பாகிஸ்தானுடன் கண்டிப்பாக விளையாட மாட்டோம். பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். எங்கள் அரசாங்கம் என்ன சொன்னாலும், நாங்கள் செய்வோம். அரசாங்கத்தின் நிலைப்பாடு காரணமாக இருதரப்பு போட்டிகளில் பாகிஸ்தானுடன் விளையாடுவதில்லை, இனி வரும் காலங்களிலும் இருதரப்பு போட்டிகளில் பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம். ஆனால் ஐ.சி.சி. போட்டிகளை பொறுத்தவரை, ஐசிசி வற்புறுத்தலின் காரணமாக நாங்கள் விளையாடுகிறோம்” என்று கூறினார்.

அத்துடன் ஐ.சி.சி. தொடர்களில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என ஐ.சி.சி.-க்கு பி.சி.சி.ஐ. கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

error: Content is protected !!