Skip to content

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… முன்னாள் ராணுவ வீரர் போக்சோவில் கைது

  • by Authour
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சாரதா நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் நாட்றம்பள்ளி அடுத்த ஏதோ ஒரு பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை சைல்டு ஹெல்ப்லைன் நம்பர் ஆன 1098 தொலைபேசியில் அழைத்து புகார் பதிவு செய்தார். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அந்த அதிகாரிகள் துணையுடன் மாணவியின் தந்தை நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் மீது கொடுத்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் போக்ஸோ வழக்கின் கீழ் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஒரு ராணுவ வீரரே பதினோராம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
error: Content is protected !!