ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.
இந்த கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்ததுடன், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் ஒரு கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். எவ்வளவு கண்டிக்கப்பட்டாலும் அது குறைவுதான்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். இந்த முக்கியமான பிரச்சினை குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழுவின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.