திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 61 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் டி. எஸ். என். அவன்யூ அண்ட் அகிலாண்டேஸ்வரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஏர்போர்ட் ஆகியோர் இணைந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 13.59 லட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா துவக்க விழா நடைபெற்றது.
அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா அலுவலகத்தை மேயர் மு. அன்பழகன் திறந்து வைத்தார்கள் கண்காணிப்பு கேமராவை காவல்துறை துணை ஆணையர் ஈஸ்வரன் அவர்கள் இயக்கி வைத்து பார்வையிட்டார்கள். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா துவக்க விழாவில் மண்டல தலைவர் த . துர்கா தேவி , உதவி ஆணையர் .ச. நா. சண்முகம், காவல்த் துறை உதவி ஆணையர் டி. விஜயகுமார் மற்றும் குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
