இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர். இவர் முன்னாள் பாஜக எம்.பி. இவருக்கு ஐஎஸ்எஸ் காஷ்மீர் என்ற தீவிரவாத அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து டில்லி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் இந்திய சுற்றுலா பயணிகளை 28 பேரை நேற்று முன்தினம் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.