திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த பாலான் இவர் பழ வியாபாரம் செய்து வரும் நிலையில் நேற்று இரவு அவர் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்ற நிலையில், அதனை அறிந்த மர்மநபர்கள், சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள பாலன் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து அவரது வீட்டில் நுழைந்து இரண்டு அறைகளில் இருந்த பீரோவில் வைத்திருந்த 4 சவரன் தங்கநகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்,
அதனை தொடர்ந்து இன்று வீட்டிற்கு வந்த பாலன் தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று
பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது, உடனடியாக இதுகுறித்து பாலன் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் கொள்ளை சம்பவம் நடைப்பெற்ற வீட்டில் ஆய்வு மேற்க்கொண்டு இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..
மேலும் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் தங்கநகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

