வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு…
திருச்சி கே கே நகர் ஐயப்பன் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் திருநாராயணன். இவர் கடந்த 7ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு அமெரிக்கா சென்று விட்டார். வீட்டின் சாவியை உறவினர் வச்சலா என்பவரிடம் கொடுத்து விட்டு சென்றுவிட்டார் இந்த நிலையில் நேற்று வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே நுழைந்து பிரோவில் இருந்த 550 கிராம் வெள்ளிப் பொருட்களை திருடி கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக திருநாராயணன் உறவினர் வச்சலா கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடையின் பூட்டை உடைத்து கலர் பிரிண்ட் ர் திருட்டு..
ஸ்ரீரங்கம், மங்கம்மா நகரை சேர்ந்தவர் மகேஸ்வரன் (49). இவர் திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார் சம்பவத்தன்று இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் இந்த நிலையில் மர்ம அசாமி ஒருவர் கடையின் பூட்டை உடைத்து அதிலிருந்து கலர் பிரிண்ட் ர்ரை திருடிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து மகேஸ்வரன் தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 42) என்பவர்கடையின் பூட்டை உடைத்து கலர் பிரிண்ட் ர்ரை திருடி சென்றதது தெரிய வந்தது. இதைபடுத்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷசை கைது செய்துள்ளனர்.
மின்சார ரயில் சேவை கோரி… திருச்சி வியாபாரி தொடர்ந்த மனு தள்ளுபடி
திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த மாரி என்ற பத்மநாபன்,வியாபாரியான இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.
சென்னையில் குறைந்த கட்டணத்தில் மின்சார ரயில் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த கட்டணத்தில் மின்சார ரயில் சேவையை பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு, இது அரசின் கொள்கை முடிவுடன் தொடர்புடையது என்பதால், நீதிமன்றம் இதில் தலையிட இயலாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.