Skip to content

புதுகை: மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்குதல், கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல், உதவித்தொகைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆரம்பநிலை பயிற்சி மைய குழந்தைகளுக்கான (0-6 வயது மாற்றுத்திறனாளி குழந்தைகள்) கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். புதுக்கோட்டையில் இருந்து  இவர்கள் புறப்பட்டனர். அந்த பேருந்தை கலெக்டர் அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மனவளர்ச்சி குறைபாடுடையோருக்கான ஆரம்பநிலை பயிற்சி மையம் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வரும் 50 சிறப்பு குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பராமரிப்பாளர்கள் உதவியுடன் ஒரு நாள் சுற்றுலாவாக  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில்  உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களான தஞ்சாவூர் பெரியகோவில், அரண்மணை, பழைய மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியகம், பறவைகள் பூங்கா ஆகிய இடங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் பேருந்தில் அழைத்துச் செல்ல சுற்றுலா கழகத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு சுற்றுலா வாகனம் கொடியசைத்து வழி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், முதன்மை கல்வி அலுவலர் .கூ.சண்முகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் ரா.கார்த்திக், சீடு தொண்டு நிறுவன நிர்வாகி ராஜேந்திரன், முடநீக்கு வல்லுநர் எஸ்.ஜெகன் முருகன், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!