Skip to content

காஷ்மீர் தாக்குதல்: லஸ்கர் இ தொய்பா பொறுப்பேற்பு

  • by Authour

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் நேற்று  பிற்பகல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்28 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்த துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் குண்டு காயங்களுடன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில்  இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும்  லஸ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து உள்ளது. அந்த இயக்கமே  இதற்கு பொறுப்பேற்று உள்ளது. தாக்குதல் நடத்தியவர்களில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களின் அங்க  அடையாளங்களை கொண்டு அவர்களின் உருவப்படத்தை என்ஐஏ வரைந்து வெளியிட்டு உள்ளது.

இதற்கிடையே  இந்த தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு  தலா ரூ.10 லட்சமும்,  பெரிய காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், சிறு காயமடைந்தவர்களுக்கு தலா ரு்.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என  ஜம்மு அரசு அறிவித்துள்ளது.

error: Content is protected !!