திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா உமர் நகர் பகுதியில் சேர்ந்த முனிசாமி மகன் சின்னத்தம்பி (32) இவருக்கு பரிமளா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளன.
மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு பரிமளா மீண்டும் கர்ப்பம் தரித்ததாக தெரிகிறது இதனால் இந்த நான்கு குழந்தைகளும் தனக்கு பிறக்கவில்லை எனக் கூறி மனைவியின் மீது கணவன் சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.
மேலும் ஆத்திரமடைந்த கணவன் பரிமளாவை மல்லகுண்டா பகுதியில் உள்ள பெரிய கும்லூக் கட்டு மலை பகுதிக்கு அழைத்துச் சென்று பள்ளத்தில் கீழே தள்ளி கொன்றுவிட்டு அடையாளம் தெரியாத வகையில் பெட்ரோல் ஊற்றி எரித்து அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து பரிமிளாவின் அக்காவான உஷா அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதனால் சின்ன தம்பியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது 13 வருடங்களுக்குப் பிறகு குற்றவாளி என கணவர் சின்னத்தம்பி நிரூபிக்கப்பட்டதன் காரணமாக நீதிபதி மீனா குமாரி ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
மேலும் தடயங்களை மறைத்ததன் காரணமாக ஏழு வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் அபராதம் மேலும் அபராதத்தைக் கட்ட தவறினால் 1 வருடம் கூடுதல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் பி.டி.சரவணன் வாதாடினார்.
