Skip to content

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 அதிகாரிகளும் பலி

  • by Authour

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த உளவுத் துறை அதிகாரி தனது மனைவி, குழந்தைகள் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள்  நேற்று பிற்பகல்  துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர்.  இன்று காலை நிலவரப்படி  பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.  தமிழ்நாட்டை சோந்த  3பேர் உள்பட பலர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் மணீஷ் ரஞ்சனின் குடும்பத்தினர் உட்பட ஏராளமான குடும்பங்கள் அங்கு இயற்கை அழகை கண்டுரசித்தபடி இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்து பயணிகளை சுற்றி வளைத்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி சராமாரியாக சுட்டனர். இதில் தன் மனைவி, குழந்தைகளின் கண்முன்னே மணீஷ் ரஞ்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 ஜம்மு காஷ்மீரின் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் சிலரை ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் பெயர் மற்றும் மதத்தை பயங்கரவாதிகள் கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், சுற்றுலாப் பயணிகள் இங்கும், அங்கும் ஓடினர். திறந்தவெளி என்பதால், சுற்றுலாப் பயணிகளால் துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் லெப்டினன்ட் வினய் நர்வால் . இவர்  கடற்படை அதிகாரி. 6 நாட்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது. தேனிலவுக்காக மனைவியுடன்  வினய்  இங்கு வந்துள்ளார். அப்போது மனைவி கண் முன் அவர்  பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்ட்டார்.  பகல்கம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். ஆறு நாட்களுக்கு முன்புதான் திருமணமாகி, தனது மனைவியுடன் தேனிலவு கொண்டா வந்தபோது இவர்  பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பலியானார்.  வினய்க்கு 26 வயது தான் ஆகிறது. அவரது சடலத்தை பார்த்து மனைவி கதறி  அழுதார்.  சுட்டுக்கொல்லும் முன் அவர்களது பெயரை கேட்டு அதன் பிறகே அவர்கள் சுட்டுக்கொன்றனர் என்று  கடற்படை அதிகாரி மனைவி கூறினார்.

 

 

 

 

error: Content is protected !!