Skip to content

காஷ்மீர் சம்பவம்: பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்

ஜம்மு காஷ்மீரில் தற்போது கோடைசுற்றுலா தொடங்கியுள்ளதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். அங்குள்ள அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள், தெளிவான நீரோடைகள், பரந்த புல்வெளிகள் இருப்பதால், இது ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இதனால் பஹல்காம் பிரபல சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு வாகனங்களில் செல்ல முடியாது. கால்நடையாக அல்லது குதிரைகள் மூலமாக மட்டுமே செல்ல முடியும்.

இத்தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். இது தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் ஆகும். தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திய இடத்துக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.காயம் அடைந்தவர்களை உள்ளூர் மக்கள் குதிரைகள் உதவியுடன் மீட்டு அழைத்துவந்தனர்.

அதன்பின் அங்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு காயம் அடைந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தமிழகத்தை சேர்ந்த சந்துரு என்ற சுற்றுலாப் பயணியும் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தார்.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் 2019-ல் நடத்திய தாக்குதலில் 47 வீரர்கள் உயிரிழந்தனர். அதன்பின் தீவிரவாதிகள் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியா சென்றிருக்கும் பிரதமர் மோடி, தீவிரவாத தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்தார். இந்நிலையில் டெல்லியில் அவசர கூட்டத்தை அமைச்சர் அமித் ஷா கூட்டினார். இதில் உளவுத்துறை தலைவர் தபான் தேகா. உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிஆர்பிஎப் தலைவர் ஞானேந்திர பிரதாப் சிங், ஜம்மு காஷ்மீர் டிஜிபி நலின் பிரபாதந்த் மற்றும் ராணுவ அதிகாரிகள் காணொலி மூலம் பங்கேற்றனர். தொடர்ந்து காஷ்மீருக்கு விரைந்த அமித் ஷா, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

காஷ்மீரில் இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த யாத்திரை அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் வழியாகவும், கந்தர்பால் மாவட்டத்தின் பால்தால் வழியாகவும் நடைபெறும். இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் அமர்நாத் யாத்திரையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘‘இந்த தாக்குதலை நடத்தியவர்கள் தப்ப முடியாது. அவர்களின் தீய நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது. தீவிரவாதத்துக்கு எதிரான நமது போராட்டம் உறுதியானது. அது மேலும் வலுவடையும்’’ என குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் அமித் ஷாவும், ‘இந்த தாக்குதலை நடத்தியவர்கள் தப்ப முடியாது. அவர்கள் கடும் விளைவுகளை சந்திப்பர்’ என தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிாச்சியை வெளிப்படுத்தினார்.  இந்த சம்பவம்  குறித்து  பிரதமர் மோடியிடம் பேசிய டிரம்ப் தனது கண்டனத்தை  தெரிவித்தார்.  ரஷ்ய அதிபர் புதினும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,

காஷ்மீர் சம்பவம் குறித்து  கேள்விபட்டதும்,  உள்துறை அமைச்சர் மோடியிடம் விவாதித்த  மோடி உடனடியாக சவூதி அரோபியாவில் இருந்து டெல்லி திரும்பினார்.  உடனடியாக அவர் விமான நிலையத்தில் உள்ள ஒரு அறையிலேயே  காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இன்று  பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை கூட்டி பிரதமர்  ஆலோசிக்கிறார்.  பிரதமர் மோடியும் இன்று அல்லது நாளை  காஷ்மீா் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் கலெக்டராக இருப்பவர்  அப்தாப் ரசூல்.  இவர் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர். எனவே அவர்  உடனடியாக காஷ்மீா் செல்லும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர் இன்று  காஷ்மீர் விரைந்தார். அங்கு  தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்த  தமிழ்நாட்டை சேர்ந்த  டாக்டர் பரமேஸ்வரன்(37),  சந்துரு(83) மற்றும் பாலசந்திரன்(57)  ஆகிய 3 பேரையும் சந்தித்து அவர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர  அவர் ஏற்பாடுகளை செய்வார். தற்போது 3 பேரும் அனந்த்நாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  காஷ்மீர்  துப்பாக்கி சூட்டில்காயமடைந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்  பற்றிய  விவரங்களை அறிய வேண்டுமானால்  டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை அணுகலாம் என்றும்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களிலும் வெளியிட்டு  உளளனர்.

துப்பாக்கி சூட்டில்  கர்நாடக தொழில் அதிபர்கள் மஞ்சுநாத் ராவ்(47)பாரத் பூஷன்(35) ஆகியோரும் பலியாகி உள்ளனர்.  மொத்தம் 28 பேர்  பலியாகி உள்ளனர்.  இவர்களில் 2 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.  உ.பி. அரியானா,  மாநிலங்களை சேர்ந்தவர்களும் இதில் பலியாகி உள்ளனர்.  காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

 

 

error: Content is protected !!