Skip to content

சீர்காழி கொலை வழக்கு… வடமாநில கொள்ளையனுக்கு 3 ஆயுள் தண்டனை

  • by Authour
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயில்வே ரோட்டில் தன்ராஜ் சௌத்ரி என்ற நகை வியாபாரி வசித்து வந்தார். இவரது வீட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி. 27ஆம்தேதி காலை 6 மணி அளவில் வடமாநிலத்தைச் சேர்ந்த மனிஷ், ரமேஷ் பட்டில், மகிபால் சிங், கருணாராம் ஆகிய நான்கு பேர் தன்ராஜ் சௌத்ரியின் மனைவி ஆஷா மகன் அகில் ஆகியோரை கழுத்தறுத்து படுகொலை செய்து விட்டு வீட்டிலிருந்த 12.5 கிலோ எடை கொண்ட தங்க நகைகளையும் 6.75 லட்சம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து வீட்டிலிருந்து ஹார்ட் டிஸ்க்குகளை எடுத்து கொண்டு காரில் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் அறிந்த அப்போதைய மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா தலைமையிலான போலீசார் கொள்ளையடித்து சென்றவர்கள் எருக்கூர் வயல் பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தததையடுத்து போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில் மகிபால் சிங் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த வழக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிணையில் வெளியே சென்ற மூன்று பேரும் வழக்கில் ஆஜராகாத நிலையில் வாரண்டு பிறப்பிக்கப்பட்டு மனிஷ் கருனாராம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முதல் குற்றவாளி மனிஷ்க்கு மூன்று ஆயுள் தண்டனையும், நான்காவது குற்றவாளி கருணா ராமுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே சென்று தலைமறைவாக உள்ள ரமேஷ் பாட்டிலை போலீசார் தேடி வருகின்றனர்.
error: Content is protected !!