Skip to content

வாணியம்பாடி அருகே எருது விடும் விழா… சீறிபாய்ந்த காளைகள்

  • by Authour
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் இன்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த எருதுவிடும் விழாவில் ஆந்திர மாநிலம் குப்பம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்து கொண்டன, அதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் முன்னிலையில், விழாக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் உறுதிமொழி ஏற்ற பின் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விட்டப்பட்ட நிலையில், காளைகள் குறிப்பிட்ட இலக்கை நோக்கி ரசிகர் மத்தியில் சீறி பாய்ந்து ஓடியது. இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறுகிய நேரத்தில் ஓடி வெற்றி பெற்ற காளைக்கு முதல் 1 லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 70 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாய் என 50க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த எருதுவிடும் விழாவை கடும் வெயிலையையும் பொருட்படுத்தாமல் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து மகிழ்ந்தனர்..
error: Content is protected !!