மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சட்டமன்றத்தில் மின்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2021 வரை கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் 1 லட்சத்து 82ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கி விவசாயிகளின் பாதுகாவலராக முதல்வர் திகழ்ந்து வருகிறார். நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.
தமிழ்நாட்டின் மொத்த மின் நுகர்வோர் 3.44 கோடி, தமிழ்நாட்டின் மொத்த மின் நிறுவுதிறன் 32,595 மெகாவாட் என்பது தற்போது 39,770 மெகாவாட் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கன்டென்ட் லோடு இணைக்கப்பட்ட மின் பளு 2021 முதல் 25 வரை 4 ஆண்டுகளில் 23, 568 மெகா வாட் ஆகும்.
கடந்த அதிமுக ஆட்சியில் உச்சபட்ச மின்தேவை 16,481 மெகாவாட் மட்டுமே. அதுவும் 5 ஆண்டுகளில் 4 நாட்கள் மட்டுமே 16, 400 மெகாவாட்க்கு மேல் தேவைப்பட்டது. ஆனால் திராவிட மாடல் ஆடு்சியில் 4 ஆண்டுகிளல் 142 நாட்களுக்கு 16,400 மெகாவாட்டுக்கு மேல் உச்ச மின் தேவையாக அதிகரித்துள்ளது.
16500 மெகாவாட்டுக்க ேமெல் 20,830 மெகாவாட் வரை 4 ஆண்டுகளில் 330 நாட்கள் உச்சமின் தேவை ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரிய வளர்ச்சிக்கு உதாரணம் ஆகும்.
தமிழ்நாட்டின் அதிகபட்ச மின் நுகர்வு 2021ல் 16,481 மெகாவாட் என்பது 2024-25ல் 20,830 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது.
2021-22y; 7651 mu. 2022/23ல் 8,124 mu 2023/24 ல், 8172 mu 2024/25ல் 8405mu mu என்றுஉயர்ந்துள்ளது.
கடந்த அண்டு ஜூலை 30 வரை காற்றாலை மூலம் பெறப்பட்ட மின்சாரம் 5899 மெகாவாட். கடந்த ஆண்டு ஜூலை 9ம் தேதி காற்றாலை மூலம் கிடைக்கப்பெற்ற அதிகபட்ச மின் உற்பத்தி 120.25 mu ஆக தமிழ்நாடு றாற்றாலை மின் திட்டங்களு்ககான மறு சீரமைப்பு புதுப்பித்தல் மற்றும் அயுள் நீட்டிப்பு கொள்கை 2024ல் வெளியிடப்பட்டது.
காற்றாலை உற்பத்தியாளர்கள், பழைய காற்றாலைகளை மீண்டும் இயக்க ஊக்குவிப்பதற்காக பேட்டரி சேமமிப்பு கலத்துடன் கூடிய காற்றாலை சூரிய கலப்பின உற்பத்தி நிறுவுவதற்கான தேர்வுடன் தமிழக அரசால் வெளியிடப்படடது.
தமிழ்நாட்டில் 47 புனல் மின்நிலையங்களில் 2323 மெகாவாட் நிறுவுதிறன் மூலம் 2021-25 மார்ச் வரை 20, 224.29 அர மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் புனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி 2021 முதல் 2025 வரை 4 ஆண்டுகளில் மத்திய மின் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 15,499 mu ஆகும். ஆனால் 20, 224 mu உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 2022-23ல் அதிகபட்ச மின் உற்பத்தியாக 6,174 mu உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கொல்லிமலை மின் உற்பததி திட்ட பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளன. குந்தா நீர்மின்திட்டம் 77 சதவீதம் முடிவடைந்துள்ளன.
இரண்டு திடடங்களம் 2025-26ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மிக குறைந்த செல்வில் மின் உற்பத்தி என்பது புனல் மின்திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மதுல்வர் அவர்கள் புனல் மின் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் 14, 500 மெகாவாட் திறன் கொண்ட 15 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் தமிழ்நாடு மின்வாரியத்தின் மற்றும் ஒரு மைல்கல் ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் இணை ின் உற்பத்தி நிலையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டது. தற்போது வரை 7 இணை மின் உற்பததி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. தர்மபுரி மற்றும் எம்.ஆர் கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கலை ஆலை இணை மின் திட்டம் இயக்கி வைக்கப்பட்டது. மீதம் உள்ள 5 ஆலைகளில் 26 பிப்ரவரிக்குள் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் 342 புதிய துணை மின் நிலையங்கள், 51 துணை மின்நிலையங்கள் தரம் உயர்த்துதல் எ 393 துணை மின் நிலையங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுளன.
116 துணை மின் நிலையங்களின் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 64 துணை மின் நிலையங்களின் பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் 74, 815 மின் மாற்றிகள் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கவும், பாதுகாப்பான மின் கட்டமைப்பை அமைக்கவும், சென்னை நெருநகரம் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சென்னை பெருநகர் பகுதிகளில் 2021 வரை 5801 மின் பெட்டிகள் 495 கி.மீ. புதைவட பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டன.
கடந்த 4 ஆண்டுகளில் திராவி0ட மாடல் ஆட்சியில் 32, 337 மின்பெட்டிகளும், 2774 கி.மீ. புதைபட பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. பெரம்பூர், ஆவடி கோட்டங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தாம்பரம், டையாறு, ITC காரிடர் கோட்டங்களில் பணிகள் நடந்து வருகிறது.
சென்னையில் தடையில்லா மின்சாரமி் வழங்க 5433 RMUகளும் நிறுவப்பட்டுள்ளன.
கடந்த 21ம் அண்டும் முதல்வர் அவர்களால் தொடங்கி வைககப்பட்ட மின்னகம் மற்றும் நுகர்வோர் சேவை மையம் பொதுமக்களுக்கும் மின் வாரியத்திற்கும் ஒரு பாலமாக திகழ்ந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 33 லட்சத்து 80 ஆயிரத்து807 புகார்கள் பெறப்பட்டு அவற்றில் 33 லட்சத்து 74 ஆயிரத்து 801 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. அதாவது 99.82 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது.
பணியின்போது காலமான மற்றும் மருத்துவ காரணங்களுக்காக ஓய்வு பெற்ற பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 2692 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 50 உதவி பொறியாளர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
கோவில் தேரோடும் வீதிகளில் புதைவடப்பணிகள் முடிக்கப்பட்டு இயக்கத்தில் உள்ளவை 7 கோவில்கள். பணிகள் முடிக்கப்பட்டு சோதனை இயக்கத்தில் உள்ளவை 7 இன்னம் 7 இடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 12 இடங்களில் ஆரம்ப நிலையில் பணிகள் உள்ளன.
தஞ்சை, திருவண்ணாமலை, கரூர் ஆகி இடங்களை தலைமையிடங்களாக கொண்டு 3 புதிய மண்டல அலுவலகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. திருவள்ளூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய மின் பகிர்மான வட்ட அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
புதிதாக சேப்பாக்கம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், டெங்கனிப்கோட்டை, பென்னாகரம், திருவெண்ணெய் நல்லூர், ஊத்துக்குளி, வேடசந்தூர், ஜெயங்ககொண்டம், சாத்தூர், கெங்கவல்லி என 11 புதிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அன்ல் மின்நிலையங்களின் சாம்பல் விற்பனை மூலம் வருவாய் என்பது 2016ல் 91 கோடி கிடைத்தது. கடந்த அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் ரூ.455 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. ஆனால் தற்போது 4 ஆண்டுகளில் ரூ.773 கோடி வருவாய் ஈட்டி சாதனை கடைத்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் 63 394 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.294 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நிறைவடைந்தது. இந்தியாவின் முதல் டிஸ்காமாக டான்ஜெட்கோவின் அனைத்து கள சொத்துக்களின் விவரங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்ள்ளது. மின உயரழுத்த சொத்துக்களை டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
மின்வாரிய பொறியாளர்களை பயன்படுத்தி புவிவியல் தகவல் முறைமையை செயல்படுத்தியன் வளைவாக ரூ.200 கோடி செலவு சேமிக்கப்பட்டுள்ளது.
கைதத்றி நெசவாளர்களுக்க விலையில்லா மின்சாரம் 200 யூனிட் 300 யூனிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு 1000 யூனிட்களுக்கு மேல் உபயோகிக்கும் விசைத்தறி நெசவாளர்களுக்கு நிலை கட்டணம் செலுத்துவதில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் வரை குறைக்கப்பட்ட உட்சபட்ச நேர கட்டணமான 15 சதவீதமும் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் படிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வணிக ரீதியில் இயங்காத நூலகங்களுக்கு மின் கட்டணத்தினை மானியம் இல்லா வீட்டு விதிப்பட்டியலில் கண்கீடு செய்வதற்கு ஒப்புதல் ஒளிக்கப்பட்டு 30 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் திராவிட மாடல் நல்லாட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தேசிய அளவில் 12 விருதுகள் பெற்றுள்ளன. இவற்றில் 2 skotch விருதுகளம் அடங்கும். நிறுவன வள திட்டமிடல், காற்றாலை மின் உற்பத்தி, தானியங்கி மின் அளவுகள் பொருத்தி செயல்படுத்தியமைக்காக மற்றும் நிலக்கரி கையாளுதலுக்காக இந்த விருதுகளை பெற்றுள்ளது.
சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் செலுத்த வேண்டிய உட்சபட்ச நேரக்கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
2022-23 ம் நிதியாண்டில் அனல் மின் நிலையத்தின் இயக்கம், பராமரிப்பு செலவுகளை குறைத்தல், நிலக்கரி கையாளம் கட்டணத்தில் சேமிப்பு, நிலக்கரி கப்பல்களை குறைந்த வாடகையில் நீண்ட காலத்திற்கு ஒப்பந்தம் செயல், கூடுதல் கொள்ளளவு கொண்ட கப்பல்களை இயக்குதல், கடன்களுக்கான வட்டி வகிதங்கள் குறைப்பு, மத்திய மின் தொடரமைப்பு கட்டண குறைப்பு, உலர்சாம்பல் விற்பனை மூலம் வருவாய் பெருக்குதல், மின் பரிமாற்ற ஏற்பாடு ஆகியவற்றின் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகனம் செல்வினங்களில் ரூ.1,090 கோடி சேமித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
