Skip to content

அரியலூர் மாவட்டத்தில் 25ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

  • by Authour
அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு இன்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தற்போது 25.04.2025 (வெள்ளிக்கிழமை) அன்று ஆண்டிமடம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ள சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர். . இம்முகாமில் கலந்து கொள்வதற்கு 18 வயது முதல் 45 வரையிலான 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையும், ஐடிஐ, டிப்ளமோ, BE, வேளாண்மை மற்றும் Hotel Management படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
error: Content is protected !!