தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் தெருவில் வசிக்கும் சத்தியேந்திரன் மகன் தென்னவன் வயது 32 இவர் கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார் இரவு 12 மணியளவில் சாப்பாடு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார் . அப்போது ரயில்வே தண்டவளத்தை நடக்கும்போது ராமேஸ்வரம் விரைவு ரயில் மோதியது சம்பவ இடத்திலேயே மீனவர் தென்னவன் இறந்து விட்டார் இது தொடர்பாக பட்டுக்கோட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வேதவேந்தன் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் .பின்னர் மீனவர் உடலை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.