போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு வரும் சனிக்கிழமை(26ம் தேதி) காலை 8.30 மணியளவில் நடைபெறும் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர் பசிலிகாவில் உடல் அடக்க திருப்பலிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்கிறார். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் நாசர், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இதற்கிடையே இறப்பிற்குப் பிறகு போப் பிரான்சிஸின் படங்களை வாடிகன் வெளியிட்டுள்ளது. சிவப்பு அங்கிகளுடன், பிஷப் ஆடை போப் பிரான்சிஸுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் உடல் அவர் வசித்த சாண்டா மார்டா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.