மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சட்டமன்றத்தில் கூறியதாவது: டாஸ் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்படும். மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என அனைவருக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் சம்பள உயர்வு வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.64.08 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக ரூ.1 0 வசூலித்தவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் இப்படி கூடுதலாக வசூலித்தவர்களிடம் மட்டும் ரூ.6.79 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. மது போதையின் தீங்கு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியிலும் டாஸ்மாக் கடைகளில் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.