திருச்சி மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட பகுதி எடமலைப்பட்டி புதூர் திமுகவைச் சேர்ந்த முத்து செல்வம் இந்த வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்த பகுதியில் பொதுப் பாதை ஒன்று உள்ளது. அதனை அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர்சொந்தம் கொண்டாடி வருவதாக
கூறப்படுகிறது. நீதிமன்றம் அந்த நபருக்கு பொதுப் பாதை சொந்தம் இல்லை என தீர்ப்பளித்தது. இதையடுத்து முத்து செல்வம் அந்த பகுதியில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முத்தையாவின் மகள்கள் இருவரும் ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தன்னை
ஆபாச வார்த்தைகளால் திட்டிய பெண்கள் இருவர் மீதும் முத்துச்செல்வம் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினியிடம் புகார் அளிக்க 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் 200 பேருடன் வந்தார்.
ஆனால்கமிஷனர் அவரை சந்திக்க மறுத்த நிலையில் அவர்கள் அனைவரும் முத்துச்செல்வ தலைமையில் திருச்சி – புதுக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கை விட்டு அனைவரும் அமைதியாக கலைந்தனர்.
