போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவரது உடலுக்கு கார்டினல்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இறுதிச்சடங்கு இந்த வாரத்தின் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்லடக்க தேதியை முடிவு செய்ய கார்டினல்கள் வாடிகனில் கூடி உள்ளனர். இந்த இறுதிச்சடங்கில் தமிழக அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்பார் என தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார். நாசருடன் திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜூம் பங்கேற்கிறார். இந்த தகவலை முதல்வர் அறிவித்து உள்ளார்.