அரியலூர் மாவட்டத்தில் “புதுமைப் பெண்” இரண்டாம் கட்டத் திட்டத்தில் 445 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார். அன்னை தெரசா நர்சிங் மற்றும் பேரா மெடிக்கல் கல்லூரியைச் சேர்ந்த 12 மாணவிகளுக்கும் என இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மொத்தம் 445 மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் மற்றும் நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய “புதுமைப் பெண்” பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை (Debit Card) ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
