2024-25 சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. ஒப்பந்த பட்டியலில் மொத்தம் 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் நான்கு வீரர்கள் ஏ+ கிரேடு பிரிவிலும், ஆறு வீரர்கள் ‘ஏ’ கிரேடிலும், ஐந்து பேர் ‘பி’ கிரேடிலும் இடம் பெற்றுள்ளனர். மீதமுள்ள 19 பேருக்கு ‘சி’ கிரேடு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு ‘பி’ கிரேடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் ‘சி’ கிரேடு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார். கடந்த சீசனில் இவர்கள் இருவருமே உள்நாட்டு போட்டிகளில் விளையாட மறுத்ததால் சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தனர்.
ஏ+ கிரேடு வீரர்களுக்கு ஊதியமாக ரூ.7 கோடியும், கிரேடு ‘ஏ’ வீரர்களுக்கு ரூ.5 கோடியும், கிரேடு ‘பி’ வீரர்களுக்கு ரூ.3 கோடியும், கிரேடு ‘சி’ வீரர்களுக்கு ரூ.1 கோடியும் ஊதியமாக கிடைக்கும்.
பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களின் விவரம்:
கிரேடு ஏ+ – ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா
கிரேடு ஏ – முகமது சிராஜ், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பந்த்.
கிரேடு பி – சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர்.
கிரேடு சி – ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் படிதார், துருவ் ஜூரெல், சர்பராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.