கரூர் – ஈரோடு சாலையில் உள்ள வடிவேல் நகரை அடுத்த தமிழ் நகர் மற்றும் வெங்கடாசல நகர் பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் swift காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அடுத்தடுத்து 2 வீடுகளில் வீட்டின் முன்பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்று பணம், ஸ்டில் கேமரா, ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் swift காரில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ஒரு வீட்டின் இளைஞர் முன்பக்க கேட்டின் பூட்டை கடப்பாறையால் உடைத்ததும், காரிலிருந்து ஆயுதங்கள் இருந்த பேக்குடன் இறங்கி வீட்டின் முன்பக்க கதவை கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களால் உள்ளே செல்லும் கண்காணிப்பு சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மாநகராட்சியை ஒட்டிய புற நகர் பகுதியில் பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
