பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் , பாண்டாகபாடியைச் சேர்ந்தவர் பழனி மகன் சின்னசாமி. வயது 60 உடைய இவர் தற்போது உடல் நிலை சரியில்லாமல் அதற்கு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு இன்று வந்து சிகிச்சை பெற்று மீண்டும் ஊருக்கு செல்வதற்காக இன்று காலை 10 மணிக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாண்டகபாடி செல்லும் அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது பெரம்பலூர் ஆத்தூர் சாலை சோமாண்டாபுதூர் பிரிவு சாலை அருகே பேரும் சென்ற போது சின்னசாமி
அருகிலிருந்தவர்களிடம் தனக்கு வாந்தி வருவதாக கூறியுள்ளார். அப்போது அவர் பேருந்து படிக்கல் அமர்ந்து வாந்தி எடுக்க முற்பட்டபோது அப்படியே மயங்கியுள்ளார். பின்னர் பேருந்து நிறுத்தப்பட்டு சக பயணிகள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸிற்கு போன் செய்துள்ளனர். அவர்கள் வந்து பரிசோதித்த போது அவர் இறந்த விட்டதாக கூறியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் நகர போலீஸார் இறந்த சின்னசாமியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பேருந்து நடத்துனர் ஓட்டுநரிடம் சின்னசாமி இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.