சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் நெடுஞ்சாலை துறைக்கு ஆணையிட்டது. அதைத்தொடர்ந்து பிரதான கட்சி தலைவர்கள் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றிடுமாறு கட்சியினருக்கு கட்டளையிட்டனர். இதற்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.
நீதிமன்றம் அனுமதித்த காலக்கெடு நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள திமுக கொடிக்கம்பம் மற்றும் மதிமுக கல்வெட்டு ஆகியவற்றினை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
அதைத் தொடர்ந்து டிவிஎஸ் டோல்கேட் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் தொழிற்சங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டை அகற்ற சென்றனர அப்போது
சாலை பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் . இதனால் அதிகாரிகளுக்கும் சாலை பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சாலை பணியாளர்கள் 12 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
